மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியில் தட்டுப்பாடு: மருந்து அளவைக் குறைக்க பரிந்துரை

பிரசுரிக்கப்பட்டது

உலகளவில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை சரி செய்யும் விதமாக யெல்லோ ஃபீவர் என்றழைக்கப்படும் மஞ்சள் காய்ச்சலுக்கு வழங்கப்படும் தடுப்பூசியின் நிர்ணயிக்கப்பட்ட அளவில் 80 சதவீதத்தால் குறைக்கக் கோரி உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறைக்கப்பட்ட அளவிலும் கூட, மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி ஒரு ஆண்டு முழுவதும் பாதுகாப்பு தரும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் அங்கோலாவில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் மஞ்சள் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, அவசர இருப்பு அனைத்தும் வெகுஜன நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அங்குள்ளவர்களுக்கு அனுப்பட்டுள்ளது.

காங்கோ ஜனநாயக குடியரசின் ஜனத்தொகை மிகுந்த கின்ஷஷா நகரிலும் , மஞ்சள் காய்ச்சல் சம்பவங்கள் நடந்திருப்பதாக எல்லையில் உள்ள நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதாக இந்த மாதம் உலக சுகாதார நிறுவனமானது எச்சரித்திருந்தது.

மேலும், அதிக ஜனபெருக்கம் உடைய காங்கோவின் கின்ஷாசா நகரில் இந்த காய்ச்சல் ஏற்பட்ட சம்பவங்கள் கவனத்துக்கு வந்திருப்பதாகவும், அங்கோலாவின் எல்லை நாடுகளுக்கு இந்த நோய் பரவும் ஆபத்து அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

அங்கோலாவின் எண்ணெய் தொழிலில் சீனா பெரிய அளவு முதலீடுகளை செய்துள்ள நிலையில், சீனாவிலும் மஞ்சள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.