ஃபலூஜாவை இராக் இராணுவம் மீட்டு நாட்டுக்கு தந்துள்ளது - பிரதமர் அல் அபாதி
நான்கு வாரம் நடத்திய போருக்கு பிறகு இராக் இராணுவம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பை தோற்கடித்து ஃபலூஜா நகரை நாட்டிற்கு மீட்டு தந்திருப்பதாக பிரதமர் ஹைதர் அல் அபாதி அறிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், AFP
தொலைக்காட்சியில் சிறிது நேரம் தோன்றிய அபாதி, ஃபலூஜாவில் இன்னும் இருக்கின்ற தீவிரவாதிகளின் சிறு பிரிவுகள் மிக விரைவில் அகற்றப்படுவார்கள் என்றார் தெரிவித்தார்.
இரு பக்கமும் இராணுவ தளபதிகள் அமர்ந்திருக்க தோன்றிய அவர், ஐ.எஸின் முக்கிய வலுவிடமான இராக்கின் வடக்கு நகரான மோசூலை மீட்பது தான் இராணுவத்தின் அடுத்த பணி என்றார்.

பட மூலாதாரம், AFP Getty Images
.பலூஜாவில் நடைபெற்ற போரால் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடிமக்கள் இடம்பெர்ந்துள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பு இராக் மற்றும் சிரியாவில் வைத்திருந்த பிற நகரைவிட நீண்டகாலம் பலூஜாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது குறிப்பிடதக்கது.

























