ஐரோப்பிய ஒன்றிய பிரச்சாரங்களில் அனுமதியின்று இலச்சினைகளை பயன்படுத்தியதற்கு நிஸான் எதிர்ப்பு

பிரசுரிக்கப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டி மேற்கொள்ளப்பட்டு வரும் அதிகாரபூர்வ பிரசார அமைப்புக்கு எதிராக, தன் நிறுவனத்தின் இலச்சினைகளை உரிய அனுமதியின்றி துண்டு பிரசாரங்களில் பயன்படுத்தி வருவதை எதிர்த்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக ஜப்பானிய கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்பது தொடர்பான பிரசாரத்தில் மேலதிகமாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதை எதிர்த்து இந்த சட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளதாக நிஸான் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமா அல்லது இணைந்திருக்க வேண்டுமா என்ற விவகாரத்தில் தங்கள் நடுநிலை வகிப்பதாக நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிஸான் நிறுவனத்தின் இந்த நிலை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என பிரசாரம் செய்யும் தரப்பிலிருந்து உடனடிய கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.