நாட்டை விட்டு தப்பியோடி வந்தவர்கள் பற்றி தென் கொரியாவில் விசாரணை

பிரசுரிக்கப்பட்டது

நாட்டை விட்டுத் தப்பியோடி வந்தவர்கள் என்று தென் கொரிய ஆட்சியாளர்களால் கூறப்படும் 12 வட கொரியப் பெண்களை பற்றி தென் கொரிய நீதிமன்றம் ஒன்று விசாரித்து வருகிறது.

வட கொரியாவிலிருந்து தப்பியோடுவோர் பலரும் சீனா வழியாக தென் கொரியா வருவதாக கூறப்படுகிறது
படக்குறிப்பு, வட கொரியாவிலிருந்து தப்பியோடுவோர் பலரும் சீனா வழியாக தென் கொரியா வருவதாக கூறப்படுகிறது

அவர்களுடைய விருப்பதற்கு எதிராக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்களா என்று இந்த விசாரணையில் முடிவு செய்ய மனித உரிமை வழக்கறிஞர் குழுவினர் இந்த விசாரணைக்கான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சீனாவில் வட கொரியாவால் நடத்தப்படுகின்ற ஓர் உணவகத்தில் பணிப்பெண்களாக வேலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பியோடி வந்தவர்கள் இவர்கள் என்று தென் கொரியா கூறுகிறது.

அவர்கள் கடத்தப்பட்டவர்கள் என்று தெரிவிக்கும் வடகொரியா, அவர்கள் வட கொரியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்கிறது.

ஒவ்வோர் ஆண்டும் வடகொரியாவை விட்டு தப்பி வருகின்ற நூற்றுக்கணக்கான பேரை தென் கொரியா எப்படி கையாளும் என்பதற்கு முன்னுதாரணத்தை இந்த வழக்கு உருவாக்கலாம் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறர்.