வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது - ரஜினிகாந்த் உருக்கம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிரிழப்பு தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது என்று ட்விட்டரில் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழக முதல்வரும், அதிமுகவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வரின் மறைவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரஜினி, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது என்றும், மரியாதைக்குரிய நம் முதல்வரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க
































