இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் முக்கிய தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

பிரசுரிக்கப்பட்டது

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் ராணுவம் மற்றும் போலிசார் நடத்திய கூட்டு நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்
படக்குறிப்பு, கோப்புப்படம்

குறைந்த நேரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் முஸாஃபர் நைக்கூ பலியானதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

லஷ்கர் -இ-தொய்பாவின் தளபதி முஸாஃபர் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எட்டு ஆண்டுகளுக்குமுன், மும்பையில் நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர் மீது இந்தியா குற்றஞ்சாட்டியிருந்தது.

ஆனால், முஸாஃபர் ஒரு சிறிய குழுவுடன் இருந்தார் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கடும்பனி நிலவிவரும் நிலையில், முஸாஃபர் நைக்கூவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கோபத்துடன் ஸோபோர் நகருக்கு அருகே இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு வருகின்றனர்.

கடந்த பல வாரங்களில் தீவிரவாத குழுக்களின் தளபதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.