கதராடைகளை மக்கள் வாங்குவது தள்ளுபடிக்காகவா? தரத்திற்காகாகவா?

    • எழுதியவர், பிரதீப் குமார்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

காதி விற்பனையகங்களில், கதர் ஆடைகள் விற்பனை 90% வரை அதிகரித்திருப்பதாக கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோதி "மனதின் குரல்" என்ற வானொலி நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டு காதி தள்ளுபடி 30 நாட்களுக்கு மட்டும் ஏன்?

தீபாவளி பண்டிகை காலத்தில் அக்டோபர் 17-ஆம் தேதியன்று டெல்லியில் இருக்கும் ஒரு கதர் கடையில் 1.2 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையானது என்பதையும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், நவம்பர் இரண்டாம் தேதியன்று, டெல்லியில் ஒரு காதி விற்பனைக் கடைகளுக்கு சென்ற வாடிக்கையாளர்கள் சந்தித்த பிரச்சனை தள்ளிவிடக்கூடியதல்ல, 'தள்ளுபடி' பிரச்சனை!

ஒரு மாதத்திற்கு மட்டுமே தள்ளுபடி

தள்ளுபடி முடிந்துவிட்டதாக காதி விற்பனையகத்தில் சொன்னார்கள். ஏன் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை.

அந்த கடையில் இருந்த ஒரு வயதான ஊழியரிடம் இதுபற்றி விசாரித்தோம். அவர் அளித்த பதில், "தள்ளுபடியை நிறுத்தும்படி ஒரு நாள் முன்னர்தான் சேர்மனிடம் இருந்து தொலைபேசியில் உத்தரவு வந்தது".

மற்றொரு காதி விற்பனை நிலையத்திற்கு சென்று இதுபற்றி பேசினோம். காதி விற்பனையகத்தின் வரலாற்றிலேயே தள்ளுபடியை தள்ளுபடி செய்வது இதுவே முதல்முறை என்று அங்கிருந்த பலரும் சொன்னார்கள். இது அவர்களுக்கும் வியப்பான செய்தியாகவே இருக்கிறது.

இந்த ஆண்டு காதி தள்ளுபடி 30 நாட்களுக்கு மட்டும் ஏன்?

காந்தி ஜெயந்தியான அக்டோபர் இரண்டு முதல் ஜனவரி முப்பதாம் தேதி வரை என மொத்தம் நான்கு மாதங்களுக்கு காதியில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம் என்பது நீண்டகால நடைமுறை. வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு 20% முதல் 40% தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த ஆண்டு அக்டோபர் இரண்டு முதல் நவம்பர் இரண்டாம் தேதி வரையில் ஒரு மாதம் மட்டும்தான் தள்ளுபடி வழங்கப்பட்டது. 1956இல் கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் தொடங்கப்பட்டதில் இருந்து தள்ளுபடியை ஒரு மாத அளவாக குறைத்துள்ளது இதுவே முதல்முறை.

இது குறித்து கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத் தலைவர் வினய் சக்சேனாவிடம் கேட்டோம். கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு மட்டுமே கதராடைகளுக்கு தள்ளுபடி அளித்துள்ளோம். தள்ளுபடி மற்றும் அரசு உதவியால் கதராடைகள் விற்பனை செய்யும் போக்கை மாற்றவேண்டும். அதற்கு பதிலாக, மக்கள் கதராடைகளை காதியில் வாங்குவது அதன் தரத்திற்காகவே என்பதை வெளிகாட்ட விரும்புகிறோம்" என்று சொல்கிறார்.

இந்த ஆண்டு காதி தள்ளுபடி 30 நாட்களுக்கு மட்டும் ஏன்?

விற்பனையில் பாதிப்பு இல்லை

தள்ளுபடிக்கான காலத்தை குறைத்திருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். ஆனால் அது தரத்தின் முன் அடிபட்டு போய்விடும் என்று சுட்டிக்காட்டும் வினய் சக்சேனா, கதர் ஆடைகளின் விற்பனையில் சுணக்கம் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

காதி விற்பனையகங்களில் வாடிக்கையாளர்களின் அதிருப்தியை பார்க்கமுடிந்தது. ஒரு வாடிக்கையாளரின் வருத்தம் இது, "கதராடைகளுக்கு தள்ளுபடி வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்து வாங்குவோம். இந்த ஆண்டு, தள்ளுபடி இல்லாமல் முழு விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது வருத்தமாக இருக்கிறது" என்கிறார்.

இதேபோல் பல்வேறு இடங்களில் உள்ள காதி விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் அதிருப்தியும், வருத்தமும் வெளிப்படுகிறது. அதை எதிர்கொள்வது அங்கிருக்கும் பணியாளர்களே.

காணொளிக் குறிப்பு, பெண்களின் உயிரைக் காக்கும் மருத்துவ 'செல்ஃபி'

"ஒரு நாள் முன்னதாக வந்திருந்தால், ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைத்திருக்கும். தள்ளுபடி காலம் குறைக்கப்பட்டது குறித்த அறிவிப்பு ஏன் வெளியிடப்படவில்லை?" இது விடை தெரியாத வினாவாக தொக்கி நிற்கிறது.

சில வகை துணிகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படும். இப்போது புது வரவு மற்றும் இருப்பில் ஏற்கனவே உள்ள துணிகளுக்கும் ஒரே விலை கொடுக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்துகிறது.

இதைத் தவிர, காதியில் கதராடைகளின் விலையும் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்வதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐநூறு ரூபாய்க்கு கிடைத்த ஆடைகள் தற்போது 800 ரூபாயாகிவிட்டது. 100-1200 ரூபாய்க்கு விற்றவை தற்போது இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதிகமாகிவிட்டது. அதோடு ஜி.எஸ்.டியும் விலையை கூடுதலாக்குகிறது என்று மோஹித் வருத்தப்படுகிறார்.

இந்த ஆண்டு காதி தள்ளுபடி 30 நாட்களுக்கு மட்டும் ஏன்?

கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத் தலைவர் வினய் சக்சேனா இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன விளக்கமளிக்கிறார்?

"சந்தையில் பிற போட்டியளார்களுக்கு போட்டி அளிக்கும் விலையில் கதர் ஆடைகள் விலையும் நிர்ணயிக்கப்படவேண்டும். அப்போதுதான், கதர்த் துறையை மேம்படுத்தமுடியும், மக்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் அரசின் லட்சியத்தையும் பூர்த்தி செய்யமுடியும்".

பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்ற பிறகு கதர்த் துறை ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகளை கண்டுள்ளது, விற்பனையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2014-15ஆம் ஆண்டில் கதராடை உற்பத்தி கிட்டத்தட்ட எட்டு சதவிகிதம் அதிகரித்தது, விற்பனையும் எட்டு சதவிகிதம் அதிகரித்தது.

அதுவே 2015-16 காலகட்டத்தில் கதராடை உற்பத்தி 21 சதவிகித அளவுக்கும், விற்பனை 31 சதவிகிதத்திற்கும் அதிகரித்துள்ளது. அதேபோல் 2016-17 காலகட்டத்தில் கதர் உற்பத்தி 31 சதவிகித அளவுக்கும், விற்பனை 32 சதவிகிதம் என்ற உச்சத்தை எட்டியதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கதர் துறை உண்மையிலுமே சுறுசுறுப்பாக இயங்குகிறதா?

"இந்த ஆண்டு விற்பனை வழக்கத்தைவிட 40 சதவிகிதம் அதிகரிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோதியின் மீதான ஈர்ப்பு இளைஞர்களை கதராடையை நோக்கி ஈர்த்துள்ளது. எனவே எங்கள் லட்சியம் ஈடேறும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வினய் சக்சேனா.

கடந்த இரண்டு ஆண்டுகளில் காதியின் 336 புதிய கடைகளும் விற்பனையகங்களும் திறக்கப்பட்டுள்ளன என்கிறார் கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத் தலைவர் வினய் சக்சேனா.

காணொளிக் குறிப்பு, முதல் உலகப் போர்: பிரிட்டிஷாருக்காக இறந்த இந்திய சிப்பாய்கள்

இதைத்தவிர, காதி பரிசுக் கூப்பன் திட்டமும் விற்பனையை ஊக்குவிக்கிறது. கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் பரிசுக் கூப்பன் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிதியாண்டில் 5 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுக் கூப்பன்கள் விற்பனையாகியிருப்பதாக இந்த ஆணையம் கூறுகிறது. இது கடந்த ஆண்டின் 86 லட்சம் என்பதைவிட 680 சதவிகிதம் அதிகம்.

கதராடைகளை பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தபிறகு, காதி விற்பனையகங்களில் விற்பனை அதிகரித்தாலும், அதற்கு அரசியல் சாயம் பூசப்பட்டது.

இந்த ஆண்டு காதி வெளியிட்ட நாள்காட்டியில் காந்தியின் புகைப்படத்திற்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோதியின் படம் இடம்பெற்றிருந்தது.

பிறகு நாள்காட்டி பற்றி பேசிய ஹரியாணா மாநில முதலமைச்சரும் பாஜக தலைவருமான அனில் விஜ், நாள்காட்டியில் இருந்து காந்தியின் புகைப்படம் நீக்கப்பட்டதுபோல், காலப்போக்கில் ரூபாய் தாள்களில் இருந்தும் காந்தியின் உருவம் நீக்கப்படும் என்று கூறினார்.

காதியின் நாள்காட்டியில் இருந்து நீக்கப்பட்டது காந்தியின் உருவப்படம் மட்டும்தானா? இல்லை அதன் அடிப்படை கொள்கைகளுமா?

காதியின் மாறிவரும் நிலைமையையும் போக்கையும் பார்த்தால், ஆளும் கட்சி, காதிக்கு வேறு அடையாளத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக தோன்றுகிறது.

தற்போதைய கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றி காந்தியவாதிகளுக்கு மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது. காதியும் பெருநிறுவனங்களைப் போல் மாறிவருவதாக அவர்கள் குறைகூறுகிறார்கள்.

ஆதித்ய பிர்லா ஃபேஷன் அண்ட் ரீடெய்ல், ரேமண்ட், அர்விந்த் மில்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுடன் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக காதி கைகோர்த்திருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த ஆண்டு காதி தள்ளுபடி 30 நாட்களுக்கு மட்டும் ஏன்?

கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத்தின் கண்ணோட்டம் ஆக்கப்பூர்வமாக மாறியிருக்கிறது. புதிய டிசைன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காதி மாறுகிறது, மேம்படுகிறது, அதிகமாக விற்பனையாகிறது. ஆனால், காதி இனிமேல் 'அதே காதி'யாக இருக்குமா? இது மிகப்பெரிய கேள்வி.

குமார் பிரசாந்த் கூறுகிறார், "புள்ளிவிவரங்களும் விற்பனை தரவுகளும் நிதர்சன நிலைமையை கூறுவதில்லை. நாடெங்கிலும் உள்ள காதி விறபனை நிலையங்களின் நிலைமை மோசமாகி வருகிறது. அவர்கள் மூடும் நிலையில் இருக்கிறார்கள், காதியை முன்னேற்றுவதற்கு பதிலாக, அதை சந்தையில் இருந்தே வெளியேற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது."

வினய் சக்சேனாவின் கருத்துப்படி, காதியை பிரபலமாக்கி மேம்படுத்துவதற்கு தேவையான சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும். அரசின் அறிக்கைகளின் அடிப்படையில் செயல்படும்போது அதில் ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதை குறைக்கவேண்டும்.

காணொளிக் குறிப்பு, கம்யூனிஸ்ட் கொடியில் உள்ள சுத்தி அரிவாள் எதை குறிக்கிறது?

இதற்கு பதிலளிக்கும் குமார் பிரஷாந்த், அரசு அறிக்கைகள் பல அமைப்புகளில் நடைமுறையில் உள்ளதுதான். அவை அனைத்தையும் அரசு மூடிவிடுமா? ஆயுத கொள்முதலில்தான் மிக அதிகமான ஊழல் நடைபெறுகிறது. அதில் ஏன் அரசு கவனம் செலுத்துவதில்லை?"

ஆனால், இப்போது காதி பொதுமக்களை சென்றடைந்துவிட்டது. பொதுமக்களுக்கு வருவாய் அளிக்கும் துறையாக கதர் மாறிவிட்டது. கதராடை துறையில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் தற்சார்பு பெற்றவர்களாக மாற்றவேண்டும், அவர்களின் வாழ்வாதரம் மேம்படவேண்டும் என்பதே எங்களின் லட்சியம் என்கிறார் கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையத் தலைவர் வினய் சக்சேனா.

இருந்தாலும், குமார் பிரசாந்த் போன்றவர்களின் கருத்துப்படி, "அரசின் நடவடிக்கைகள் காதியின் அடிப்படை கொள்கையை மாற்றுவதாகவும், அது முற்றிலும் வேறு பாதையில் பயணிப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை".

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :