பிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை..
பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் காமிக்ஸ் புத்தகத் தொடராக வெளியிட ஆரம்பித்துள்ளது.
செய்தியை வாசிக்க: காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன்

''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது''

பட மூலாதாரம், AFP
செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அமைப்பு தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்தியை வாசிக்க: ''லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது''

ஓராண்டு விண்வெளியில் கழித்த மனித உடலுக்கு என்ன நடக்கும்?
ஈர்ப்பு விசை இல்லாத வெற்றிட நிலையில் ஓராண்டு விண்வெளியில் கழித்த மனித உடலுக்கு என்ன நடக்கும்? என்ற ஆய்வின் விபரங்களை காட்டும் காணொளி.

சிக்கலில் டிரம்பின் முன்னாள் ஆலோசகர்

பட மூலாதாரம், Reuters
முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி துருக்கியிடம் ஒப்படைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிளின்க்கு 15 மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

"ஒருவரை கத்தியால் குத்தி கொன்றேன்"

பட மூலாதாரம், EPA
"எனக்கு பதினாறு வயதிருக்குபோது யாரோ ஒருவரை கொன்றேன்," என்று வியட்நாமின் நகரமான டா நாங்கில் நடைபெற்ற ஒரு பிராந்திய மாநாட்டின்போது அவர் தெரிவித்தார்.

ஆழ்கடல் அற்புதம்
வேட்டையாடும் இந்த கட்டர் மீன், நண்டுகளை வேட்டையாடுவதற்கு மரபுவழிக்கு அப்பாற்பட்ட ஒரு அணுகுமுறையை கொண்டுள்ளது. கண்களைக் கவரும் அதன் காணொளி இதோ.

ஐ.எஸ் அமைப்பைத் தோற்கடிக்க டிரம்ப், புதின் உறுதி

பட மூலாதாரம், EPA
டா நாங் நகரில் நடைபெறும் மாநாட்டில் 24 மணிநேரத்திற்குள் அவர்கள் டிரம்ப் மற்றும் புதின் ஆகியோர் மூன்று முறை சந்தித்துக்கொண்டனர்.
செய்தியை வாசிக்க: சிரியாவில் ஐ.எஸ் அமைப்பைத் தோற்கடிக்க டிரம்ப், புதின் உறுதி

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, சீனா பற்றி எதிராக பேசிய அதிபர் டிரம்ப், தற்போதைய தன்னுடைய சீனப் பயணத்தின்போது, உளமார்ந்த நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



































