‘நரேந்திர மோதியின் நண்பருக்காக கன்னியாகுமரியில் உடைக்கப்படும் மலைகள்’ - எச். வசந்தக்குமார்

காணொளிக் குறிப்பு, ‘மோதியின் நண்பருக்காக கன்னியாகுமரியில் உடைக்கப்படும் மலைகள்’ - எச். வசந்தக்குமார்
பிரசுரிக்கப்பட்டது

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் - அனைத்து மதங்களும் இணக்கமாக இருக்கிறதா? பா.ஜ.கவின் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியால் கன்னியாகுமரி பெற்றது என்ன? இனயம் துறைமுகம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு என்ன? என பல விஷயங்கள் குறித்து கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரிடம் கேட்டோம்.

இந்த தொகுதியில் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்கிறதா பா.ஜ.க?

அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்வது காங்கிரஸ் கட்சி மட்டுமே. வழிபாடு நடத்துவதிலும் சரி, ஆலயத்திற்கு செல்வதாக இருந்தாலும் சரி, திருவிழா காலங்களில் ஒலி பெருக்கி அமைப்பதிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இவர்கள் (பா.ஜ.க) ஆட்சியில் இவை அனைத்துக்கும் தடை விதித்து மக்களை துன்புறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி தொகுதியை அதிகளவில் ஆண்டது காங்கிரஸ் கட்சி. இதுவரை என்ன செய்துள்ளீர்கள்?

இந்த தொகுதியில் அடிப்படை தேவைகள் அதிகம் இருந்தது. இந்த தொகுதியை இந்தியாவின் பாதப் பகுதி என்ற அழைப்பார்கள். 1956 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது முதல் அடிப்படை வசதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி தான் செய்து கொடுத்தது.

பா.ஜ.க ஆட்சியில் கன்னியாகுமரி தொகுதி வளர்ச்சி பாதையில் செல்கிறது, இளைஞர்கள் சொந்த மண்ணில் முதலாளிகளாக மாற உள்ளனர் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரக்கு இறக்குமதி ஏற்றுமதி துறைமுகத்தால் வேலை கிடைக்கும் என்கிறார். ஆனால் ஒரு பெரிய துறைமுகம் அமைய 570 ஏக்கர் தேவை,சிறிய துறைமுகம் அமைய 350 ஏக்கர் தேவை. இல்லாத ஒன்றை சொல்லி நாடாளுமன்ற தேர்தலில் அவர் (பொன்.ராதகிருஷ்னன்) வாக்கு பெற வேன்டும் என இதனை சொல்லி வருகிறார்.கடந்த முறை ஏழை குழந்தைகளுக்கு கல்லி கடன் பெற்று தருவேன் அதற்கான முதல் கையெழுத்திடுவேன் என தெரிவித்தார். ஆனால் அதனை அவர் நிறைவேற்றவில்லை. இதனை தற்போது அவர் வாக்கு சேகரிக்க செல்லும் வழி அனைத்திலும் மாணவர்கள் கேட்டு வருகிறார்கள்.

விரிவான நேர்காணலுக்கு காணொளியை காணுங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :