கொரோனா ஊரடங்கு தளர்வுகள் இன்று அமல்: என்னென்ன இயங்கும், எது இயங்காது? - விரிவான தகவல்கள்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் இன்று அமல்: என்னென்ன இயங்கும், எது இயங்காது?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அடுத்த இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக ஆலோசிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை கூடியது. இந்த கூட்டத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் சில தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

சரி என்னவெல்லாம் இயங்கும்? என்னவெல்லாம் இயங்காது? என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.

  • சென்னையில் கட்டுமான பணி, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணி மற்றும் சாலை பணிகளுக்கு தடையில்லை.
  • ஐ.டி நிறுவனங்கள் 10 சதவீத ஊழியர்களுடனும், ஏற்றுமதி தொழில் சார்ந்த நிறுவனங்கள் 25 சதவீத ஊழியர்களுடனும் செயல்படலாம்.
  • நோய் தொற்றால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படாத இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் இன்று அமல்: என்னென்ன இயங்கும், எது இயங்காது?
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.
  • அனைத்து தனிக் கடைகள் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர, ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சி ஆணையர் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
  • மின்னணு வன்பொருள் உற்பத்தி 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
Banner image reading 'more about coronavirus'
Banner

சென்னையை தவிர்த்த பிற இடங்களில்

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் இன்று அமல்: என்னென்ன இயங்கும், எது இயங்காது?
  • கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.
  • நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: