உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள்

காணொளிக் குறிப்பு, உத்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகள்
பிரசுரிக்கப்பட்டது

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் குற்றப்பின்னணி உடைய நபரைக் கைது செய்ய முயன்றபோது எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை விகாஷ் துபே எனும் நபரை கைது செய்ய முயன்றபோது இது நடந்துள்ளது.

60 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றப்பின்னணி உடைய நபர் ஒருவரை கைது செய்யும் முயற்சியின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட எட்டு காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர்.

பல காவல் துறையினரும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

மோதல் நடந்த இடத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: