சென்னை பிளாஸ்மா வங்கி எப்படி செயல்படுகிறது?
கோவிட் - 19 நோயிலிருந்து மீண்டவர்களின் ரத்த பிளாஸ்மாவைப் (ஊநீர்) பயன்படுத்தி, அந்நோய்க்குக் சிகிச்சையளிக்கும் முயற்சிகளைத் துவங்கியிருக்கிறது தமிழக சுகாதாரத் துறை.
கோவிட் - 19 நோயால் மிதமான அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஏற்கனவே இந்நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாவை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியுமா என்பதைச் சோதிப்பதற்கான முயற்சிகள் மே மாதம் 11ஆம் தேதியன்று ஐசிஎம்ஆர் பார்வையின் கீழ் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவங்கப்பட்டன.
இதற்குப் பிறகு சில நாட்களுக்கு முன்பாக அரசு இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் 26 பேருக்கு பிளாஸ்மா அளிக்கப்பட்டதில், 24 பேர் முழுமையாகக் குணமடைந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 2.34 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்மா வங்கி ஒன்றை மாநில சுகாதாரத்துறை அமைத்தது.
பிற செய்திகள்:
- பண மோசடி வழக்கு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 வருட சிறை தண்டனை
- திருடப்பட்ட பொம்மைக்காக காத்திருக்கும் தேசம் - ஒரு தாயன்பின் கதை
- "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது" - பிரதமர் மோதி பாராட்டு
- அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்: ரஜினி முன்னிறுத்தும் வேட்பாளரா? என்ன சொல்கிறார் அவர்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :