வசந்தகுமார்: கொரோனா தொற்றுக்கு பலியான முதல் இந்திய எம்.பி

காணொளிக் குறிப்பு, வசந்தகுமார்: கொரோனா தொற்றுக்கு பலியான முதல் இந்திய எம்.பி
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பியும் வசந்த் அன்ட் கோ உரிமையாளருமான வசந்தகுமார் இன்று மாலை காலமானார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பலியான முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார் வசந்தகுமார். இதற்கு முன்பு இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியான முதலாவது சட்டமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த ஜே. அன்பழகன் கருதப்பட்டார்.

அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக சனிக்கிழமை (29.08.2020) காலை 10 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் வைக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: