தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க புதிய வழிமுறைகள் - யாருக்கெல்லாம் கட்டுப்பாடு?

கோயில்
பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தில் நோய் பரவலைத் தடுக்கும் நோக்கில் மதவழிபாட்டு தலங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் பிரசாதங்களை வழங்குவதற்கு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதவழிபாட்டு தலங்களான கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விதிமுறைகளின்விவரம்

வழிபாட்டு தலங்களில் நுழைவுவாயிலில் கிருமி நாசினி வைப்பதுடன், கை, கால்களை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகளுடன், உடல் வெப்ப அளவை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேன் வசதிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.

65 வயதிற்கு மேற்பட்டுவர்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசக் கோளாறு தொடர்பான நோய், இதய நோய் போன்ற இணை நோய் கொண்டுவர்கள் , கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்டு குழந்தைகள் ஆகியோர் கோயிலுக்கு வருகை புரிவதை தவிர்க்கும் அறிவுரைகளை கோயில் நிர்வாகம் வழங்க வேண்டும். வழிபடவருபவர்களுக்கு இருமல், சளி போன்ற நோய் அறிகுறி இருந்தால் உள்ளே அனுமதிக்க கூடாது.

கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம், திருநீறு, குங்குமம் உட்பட பிரசாதம் ஏதும் வழங்கக் கூடாது. பெரிய கோயில்களில் ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கி குறிப்பிட்ட நபர்களை மட்டுமே, தனிமனித இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொள்ளும் விதமாக கை குலுக்குதல் போன்ற உடல்ரீதியான தொடர்பை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் எச்சில் உமிழ்தல் தடை செய்ய வேண்டும்.

ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் கோயில் உள்ளே நுழைய வேண்டும். கோயில் வெளிப்புறம் மற்றும் வாகன நிறுத்துமிடுத்திலும் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க பக்தர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பக்தர்கள் அணிந்து வரும் காலணிகளை காலணி பாதுகாப்பு இடத்தில் பக்தர்களே சுயமாக வைத்து திரும்ப அணிந்து செல்ல வேண்டும்.

கோயில் நுழைவுவாயில் முதல் பிரகாரங்கள், சன்னதிகள் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் செல்லும் வழிகளிலும், க்யூ வரிசைகளிலும் சமூக இடைவெளியை பராமரிக்க தரையில் வட்டங்கள் வரைய வேண்டும். சுவாமி சிலைகளை தொடுதல் கூடாது. கோயில்களில் நடைபெறும் உற்சவங்களின்போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மிகக் குறைந்த கோயில் பணியாளர்களுடன் சமூக இடைவெளி மற்றும் இதர பிற பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். திருமடப்பள்ளி/அன்னதானக்கூடங்களில் பணி செய்யும் பணியாளர்கள் உணவு தயார் செய்யும்போது சமூக இடை வெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

நோய் தொற்று உள்ள நபர் வளாகத்தில் இருப்பது அறிய வந்தால் வளாகம் முழுவதும் நோய் தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.

கோயில்களில் குளிர்சாதனக் கருவிகள் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வெப்பநிலை 24-30 டிகிரி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிசிடிவி கேமராக்கள் முடிந்தவரை பொருத்தப்பட வேண்டும்.

பக்தர்கள் திருக்குளத்திற்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. திருக்கோயில் பிரசாதக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களை அங்கேயே உண்ணாமல், பொட்டலங்களாக எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அங்கு செல்வதற்கு தனி வரிசை அமைப்பு சமூக இடைவெளியுடன் இருக்குமாறு அமைக்க வேண்டும். திருக்கோயில்களில் திருமணங்கள் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

ஒரு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் ஒரு திருமணம் என்ற முறையில் 50 நபர்களுக்கு மேற்படாமல் அனுமதித்து சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: