திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருவரின் திடீர் மரணத்துக்கு என்ன காரணம்?

பாதிக்கப்பட்டவர்
படக்குறிப்பு, உயிரிழந்தவரின் உறவினர் செவ்வந்தி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா தனிமை வார்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதே காரணம் என்று இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பணிகளின்போது அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கொரோனா தனிமை வார்டுக்கு செல்லும் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதாகவும் கெளரவன் மற்றும் 67 வயதுடைய யசோதா ஆகியோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டு, செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

"எனது மாமனாருக்கு இருமல் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்சனைகள் இருந்ததால் திங்கட்கிழமை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். செயற்கை சுவாச சிகிச்சைக்கு பின்னர் அவர் நன்றாகவே இருந்தார். இன்று காலையிலும் அவர் மற்றவர்களிடம் பேசிக் கொண்டுதான் இருந்தார். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மின்சாரம் நின்ற சில நிமிடங்களில் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்துவிட்டார்"

"இந்த மருத்துவமனையில் முறையான மின்சார வசதி இல்லை, ஆக்சிஜன் விநியோகமும் சரியாக இல்லை. நோயாளிகளின் உடல்நிலை குறித்து செவிலியர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை. நோயாளிகளின் உடல்நிலை குறித்து கேட்டால் அலட்சியமாக பதிலளிக்கின்றனர். நோயாளிகளின் உடல்நிலை குறித்த சரியான தகவல்களை தெரிவித்தால்தானே, இங்கு வைத்து சிகிச்சை கொடுக்கலாமா அல்லது மற்ற மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லலாமா என முடிவெடுக்க முடியும். அதுமட்டுமின்றி, திருப்பூர் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறைகளில் தண்ணீர் வருவதில்லை, சுத்தமாக பராமரிப்பதில்லை. நோயாளிகளால் கூட கழிவறைகளை பயன்படுத்த முடியவில்லை" என்கிறார் உயிரிழந்த கௌரவம் என்பவரின் மருமகள் செவ்வந்தி.

பாதிக்கப்பட்டவர்
படக்குறிப்பு, உயிரிழந்த மற்றொருவரின் உறவினர் பிரகாஷ்.

ஆக்சிஜன் விநியோகம் நின்றதும், தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அனைவரும் சிரமப்பட்டதாக தெரிவிக்கிறார் பிரகாஷ். இவர் உயிரிழந்த யசோதாவின் உறவினர்.

"எனது பெரியம்மாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் திருப்பூர் மருத்துவமனையில் சனிக்கிழமை சேர்த்தோம். அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலைவரை அவர் நன்றாக இருந்தார். திடீரென்று சுமார் 10 மணி அளவில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆக்சிஜன் பம்பிங் நின்றது. இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட நோயாளிகளும் இதனால் சிரமம் அடைந்தனர். செவிலியர்கள் வேறு சிலிண்டர்களை மாற்றி வைத்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தனர். ஆனால், ஆக்சிஜன் வரவில்லை."

"மின்சாரத்தை தடை இல்லாமல் வழங்குமாறு செவிலியர்கள் தொலைபேசியில் கூறினர். இருந்தும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் வரவில்லை. இதனால், ஆக்சிஜன் தடைபட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்" என்கிறார் பிரகாஷ்.

மேலும், நேற்று இரவு வரை யசோதா உடல் நலத்துடன் இருப்பதாக கூறிய செவிலியர்கள், இந்த சம்பவத்திற்கு பிறகு கொரோனாவால் அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிப்பதாக கூறுகிறார் இவர்.

ஆட்சியர்
படக்குறிப்பு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் கூறும்போது, "அரசு மருத்துவமனையை ஒட்டி அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகளின் போது அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்லும் மின்சார வயர்களில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் 40 நிமிடங்கள் வரை மின்சார வினியோகம் தடைபட்டுள்ளது. இருந்தும் மருத்துவமனையில் உள்ள 147 ஆக்சிஜன் சப்ளை மையங்கள், மின்சார தடங்கலின்றி இயங்கி வந்துள்ளன," என்று கூறினார்.

"அரசு மருத்துவமனை தலைவரின் நேற்றைய அறிக்கையின்படி உயிரிழந்த இருவரும் உடல்ஆரோக்கியம் இல்லாத நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மற்றவர்கள் நலமுடன் இருக்கின்றனர். மேலும், மின்சார தடைக்கு காரணமாக பணிபுரிந்த ஒப்பந்ததாரர், பொறியாளர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இனிமேல், இதுபோன்ற விபத்து நடக்காமல் இருக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தலைவர்கள் விமர்சனம்

இதற்கிடையே, திருப்பூர் மருத்துவமனையில் இருவர் உயிரிழந்த விவகாரத்தை அரசின் அலட்சியத்தால் விளைந்த மரணம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: