விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியது அகாலிதளம்
பிரசுரிக்கப்பட்டது
மத்திய அரசு கொண்டுவந்த விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ஜனதா கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலிதளம் வெளியேறியுள்ளது.
விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்பது நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார் அகாலிதளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர்.
அகாலிதளத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று சண்டிகரில் நடந்தது. இதில், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவது என முடிவு செய்யப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :