மதுரை கள்ளழகர் திருவிழா நெரிசலில் சிக்கி இருவர் பலி - பலர் படுகாயம்

கள்ளழகர் திருவிழா
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மதுரை கள்ளழகர் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த பண்டிகை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கள்ளழகர் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து 3ஆம் நாள் நிகழ்வுக்காக நேற்றைய முன் தினம் அழகர்கோவிலில் இருந்து சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டது.

பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பு கண்டாங்கி பட்டுடுத்தி கள்ளழகர் வேடமிட்டு தங்க பல்லக்கில் மதுரை நோக்கி ஊர்வலம் புறப்பட்டது.

நேற்று அதிகாலை மதுரை நகருக்குள் வந்த கள்ளழகரை வரவேற்கும் வகையில் மூன்றுமாவடி எனுமிடத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வைகையாற்று பகுதிக்குள் கள்ளழகர் தங்க குதிரையில் வருகை தரும்போது வெள்ளிக்குதிரையில் வீரராகவ பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

வைகையாற்றில் எழுந்தருள வந்த கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சக்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். சரியாக வைகையாற்றில் அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

முன்னதாக வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக 2 டன் வண்ண மலர்களால் மண்டகப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியையொட்டி இரும்புவேலிகள் அமைக்கப்பட்டு பலத்த காவல்துறையினர் பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கள்ளழகர் திருவிழா

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்ட, மாநிலங்களை சேர்ந்த பல லட்சக்கணக்கான பக்தர்களால் தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளதால் நிரம்பி மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

மேம்பாலங்களிலும், கட்டடங்களில் மேல் அமர்ந்து பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

வைகையாற்றில் நீரின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் வைகையாற்றிற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, வைகையாற்றை சுற்றிலும், தீயணைப்புத்துறையினர்,மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதையடுத்து பல்லாயிரக்கணக்காணோர் வைகையாற்றின் கரையோரங்கில் அமரந்து மொட்டை அடித்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

கள்ளழகரை தரிசிப்பதற்காக நள்ளிரவில் இருந்தே வெளியூர்களில் இருந்துவந்த பக்தர்கள் சாலைகளில் அமர்ந்திருந்து பின்னர் வைகை ஆற்று கரையோர பகுதிக்கு புறப்பட்டு சென்று கள்ளழகர் எழுந்தருளுவதை நேரில் கண்டுகளித்தனர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. இதை காண்பதற்காக மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் வைகையாற்றில் குவிந்தனர்.

வைகையாற்றில் நீர் நிரம்பியதால் கரையோரங்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தடையை மீறியும் வைகையாற்றில் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் நூல் அளவிற்கு கூட இடைவெளி இல்லாத அளவிற்கு மக்கள் குவிந்தனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயலெட்சுமி மற்றும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் என இருவர் உயிரிழந்தனர்.

இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அப்போது கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே கட்டுக்கடங்காத கூட்டத்தினால் நெரிசல் ஏற்ப்பட்டு பொதுமக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேலும் இந்த தள்ளுமுள்ளு நெரிசல் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். அவர்கள் முனியம்மாள் (திண்டுக்கல்), பழனி (மூணாறு), மாரியம்மாள் (செக்காணுரணி), சத்யா (திருமங்கலம்), ஜெயலட்சுமி (சம்மண்டிபுரம்), சுதந்திரமணி (திருமங்கலம்), முத்து கிருஷ்ணவேணி (செல்லூர்), மகேஸ்வரி (செல்லூர்), பஞ்சவர்ணம் (வில்லூர்), மணிமேகலை (அம்மாபட்டி), வள்ளி (ஆவியூர்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலில் இறந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் அணிஸ் சேகர் ஆகியோர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர்.

அமைச்சர் மூர்த்தி
படக்குறிப்பு, மூர்த்தி, தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்

பின்னர் தமிழக முதலமைச்சரின் உத்தரவின்பேரில் இறந்த இருவரின் குடும்பத்திற்கு, ஒருவருக்கு 5 லட்சம் என்று இருவருக்கும் தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உயிரிழந்த நபர்கள் குறித்த தகவலை அளிப்பதற்காக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 9498042434 என்ற உதவி எண்ணும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பாதவர்கள் இருந்தாலும் இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :