செயற்கை கால் மூலம் பாரா பேட்மின்டன் விளையாடும் அமுதா - உலகத்தர வரிசையில் இடம் பிடித்த சாதனை கதை!

காணொளிக் குறிப்பு, உலகத்தரவரிசையில் 9வது இடத்தை பிடித்து சாதனை படைத்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை அமுதா
பிரசுரிக்கப்பட்டது

ஐந்து வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் தனது ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் தன்னுடைய கடும் உழைப்பால் இன்று பாரா பேட்மின்டன் உலக ஒற்றையர் தரவரிசையில் 9வது இடத்தைப் பிடித்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா.இதில் சுவாரசியம் என்னவெனில், அமுதாவுக்கு 25 வரை பேட்மின்டன் விளையாட தெரியாது. இதனால் ஆரம்ப நிலையில் இருந்து பயிற்சிகள் எடுத்துக்கொண்டு, விளையாட தொடங்கியிருக்கிறார். அவரது இந்த சாதனை பயணத்தை காணொளியில் பாருங்கள்!

தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ்

ஒளிப்பதிவு - நவீன் குமார் மற்றும் ஏ. எம். சுதாகர்

படத்தொகுப்பு - ஜெரின் சாமுவேல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: