அன்புமணி ராமதாஸ் எதிராக பிடி ஆணை

அன்புமணி ராமதாஸ்
படக்குறிப்பு, அன்புமணி ராமதாஸ்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் முன்னாள் சுகாதார அமைச்சரான பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிராக பிணையில் வெளிவரக்கூடிய பிடி ஆணை ஒன்றை தில்லி நீதிமன்றம் ஒன்று பிறப்பித்துள்ளது.

மருத்துவக் கல்லூரி ஒன்று தொடர்ந்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட முறைதவறி அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக அன்புமணிக்கு எதிராக தில்லியில் உள்ள சிபிஐ விசேட நீதிமன்றம் இந்தப் பிடி ஆணையை வழங்கியது.

நீதிமன்றத்தின் அழைப்பாணையை அன்புமணியிடம் வழங்க சென்னை சென்றபோது அவர் மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதென அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பத்தாயிரம் ரூபாய் அபராதத்துடன் கூடிய இந்தப் பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார்.

இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் தேவையான அளவில் ஆசிரியர்களோ, மருத்துவ உபகரணங்களோ இல்லை என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியிருந்தும் அக்கல்லூரி இரண்டாவது ஆண்டிலும் மாணவர்களைச் சேர்க்க அச்சமயம் சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் முறைதவறி அனுமதி வழங்கியதாக இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.