வெள்ளைப்புள்ளிகளால் வெளியேற்றப்பட்ட மாணவன்

பட மூலாதாரம், SPL
தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பு படிப்பதற்கு சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவருக்கு விடிலிகோ என்கிற தோலில் வெள்ளைப்புள்ளிகள் இருப்பதை காரணம் காட்டி, அந்த மாணவரை பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேற்ற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தார் நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை அணுகியதைத்தொடர்ந்து அந்த மாணவன் தொடர்ந்து படிக்க அனுமதிக்கப்படுவார் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மூட நம்பிக்கைகளில் மூழ்கிப்போயிருக்கும் இந்திய சமூகத்தில், வெண்புள்ளிகளால் பாதிக்கப்படுபவர்கள் அன்றாடம் சந்திக்கும் சமூக பிரச்சனையின் மிக மோசமான வடிவமே இந்த சம்பவம் என்கிறார் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு ஆதரவாக முன்முயற்சிகள் எடுத்த வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் கே உமாபதி.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்தும், இந்த விடிலிகோ என்கிற தோலில் வெள்ளைப்புள்ளிகள் தோன்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் பிபிசி தமிழோசைக்கு உமாபதி அளித்த செவ்வியின் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.




























