பீஹாரில் மாவோயிஸ்டு தாக்குதலில் மூவர் பலி

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ரயில் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் தன்பாத்-பாட்னா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது மவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதினர்.
ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேரந்த ஒருவர் பிகார் போலிசில் பணியாற்றும் ஒருவர் மற்றும் ஒரு பயணி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ரயிலின் ஒட்டுனர் உள்ளிட்ட ஆறுபேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த ஜமூய் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கெடுத்தனர்.
ரயிலில் பயணித்த ரயில்வே பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் மத்திய ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாவோயிஸ்டுகளுடன் போராடினர்.
தாக்குதலுக்குப் பின நக்சல்கள் ரயில்வே பாதுகாப்பு படையினரின் மூன்று துப்பாக்கிகளை பறித்துச் சென்றுவிட்டனர் என்று ரயில்வே பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணி வெடித் தாக்குதல் காரணமாக அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் வி சி சுக்லா உட்பட இருபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் காடுகளும் இயற்கை வளங்களும் அதிகம் காணப்படும் பகுதிகளில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது.
பழங்குடியினர்களின் உரிமைகளுக்காக தாம் போராடுவதாக நக்சல்கள் கூறுகின்றனர்.
































