ஜெயந்தி நடராஜன் பதவி விலகினார்

 ஜெயந்தி நடராஜன்
படக்குறிப்பு, ஜெயந்தி நடராஜன்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெயந்தி நடராஜன் அவர்கள் பதவி விலகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஜெயந்தி நடராஜனின் பதவிவிலகலை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அவரது அமைச்சுப் பொறுப்புகள் தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சரான வீரப்ப மொய்லிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் நெருங்குவதை அடுத்து, அவர் கட்சிப்பணிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகின்றது.