அஃப்ஸல் குரு மறைவு நாள்: காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

பட மூலாதாரம், Reuters
இந்திய ஆளுகைக்குட்பட்ட காஷ்மீரின் பல பாகங்களில் அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
காஷ்மீர் பிரிவினைவாதம் பேசிவந்த முகமது அஃப்ஸல் குரு தூக்கிலிடப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதை ஒட்டி ஆர்ப்பாட்டங்கள் நடக்காமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஸ்ரீநகரில் கடைகளும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
அஃப்ஸல் குருவின் மறைவு நாளை முன்னிட்டு இப்பகுதியில் வேலைநிறுத்தம் கோரி பல்வேறு காஷ்மீர பிரிவினைவாத குழுக்கள் அழைப்பு விடுத்திருந்தன.
2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் பங்காற்றியமைக்காக சென்ற வருடம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி அஃப்ஸல் குருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது.
அத்தாக்குதலுடன் தான் தொடர்புபட்டிருக்கவில்லை என அவர் தொடர்ந்து மறுத்துவந்திருந்தார்.
அவருக்கு நியாயமான நீதி விசாரணை கிடைத்திருக்கவில்லை என சில மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டியிருந்தன.




























