வாட்ஸாப் உதவியால் காணாமல்போன சிறுவன் மீட்பு

பட மூலாதாரம், Getty
இந்தியாவில் காணாமல்போன ஒரு சிறுவன், வாட்ஸாப் (WhatsApp) இணைய குறுந்தகவல் சேவையில் பொலிசார் கொடுத்த விளம்பரத்தை வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிசார் கொடுத்த வாட்ஸாப் குறுந்தகவலைப் பார்த்த ஒருவர் கண்ணில் அச்சிறுவன் பட அவர் பொலிசாரித் தொடர்புகொண்டு அச்சிறுவன் கண்டுபிடிக்கப்படுவதற்கு உதவியுள்ளார்.
பரேலி நகரில் காணாமல் போன அந்த 11 வயது சிறுவனின் புகைப்படத்துடனான அறிவிப்பு ஒன்றை அவ்வட்டாரத்தில் உள்ள கைத்தொலைபேசிகளுக்கு பொலிசார் அனுப்பியிருந்தனர்.
ரயில் வண்டி ஒன்றில் உட்கார்ந்திருந்த ஒருவருக்கு இந்த அறிவிப்பு கிடைக்க, தன்னருகில் இருந்த சிறுவன், அறிவிப்பில் உள்ள படத்தில் இருப்பதைப்போல இருக்கிறார் என்பதை இனங்கண்டு அந்த நபர் பொலிசாரை அழைத்திருந்தார்.
இந்தியாவில் 90 கோடி பேர் கைத்தொலைபேசி பாவனையாளராக உள்ளனர். வாட்ஸாப் செயலியும் அங்கு பிரபலமாக உள்ளது.




























