இந்தியாவில் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு

பட மூலாதாரம்,
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடந்து வருகிறது.
இன்றைய வாக்குப் பதிவில் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 195 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கவுள்ளனர்
12 மாநிலங்களில் இந்த ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒன்பது கட்டமாக நடைபெறும் இத்தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் மக்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
முன்னாள் பிரதமர் தேவே கவுடா, மனேகா காந்தி, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி உட்பட பல பிரபலங்கள் இன்று போட்டியிடுகிறார்கள்.
கர்நாடகம், மராட்டியம், ஒதிஷா, உத்தரப் பிரதேசம், பிஹார் உட்பட பல மாநிலங்களில் பரவலாக பல தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இந்திய மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு கடந்த 7ஆம் தேதி துவங்கி மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற முதல் 4 கட்ட வாக்குப்பதிவுகளில், 111 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 111 தொகுதிகளில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2009ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாகும்
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும்,புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும், எதிர்வரும் 24 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.




























