அம்பாஸ்ஸடர் கார் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டது

இந்திய அதிகாரிகள் அரசியல்வாதிகளின் ஆதர்ஷ வாகனம் அம்பாஸ்ஸடர்
படக்குறிப்பு, இந்திய அதிகாரிகள் அரசியல்வாதிகளின் ஆதர்ஷ வாகனம் அம்பாஸ்ஸடர்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

இந்திய அரசியல்வாதிகளின் விருப்ப வாகனமாக பார்க்கப்பட்ட அம்பாஸ்ஸடர் காரின் உற்பத்தியை இந்தியாவின் மிகப் பழைய கார் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுத்திவைத்துள்ளது.

கடன்கள் பெருகிவருவதாலும், வாங்க ஆட்கள் இல்லை என்பதாலும், உற்பத்தித்திறன் குறைந்துவிட்டபடியாலும், கொல்கத்தா அருகிலுள்ள தொழிற்சாலையில் இருந்து உருவாக்கப்படும் இந்த காரின் உற்பத்தியை காலவரையின்றி இடைநிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

1950களின் பிற்பகுதியில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட இந்தக் காரின் வளைவுகள் கொண்ட பிரபல வடிவம், நெடிய உற்பத்திக் காலம் முழுக்கவுமே பெரிதாக மாறியிருக்கவில்லை.

இந்த கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றிவந்த ஊழியர்கள் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு பேரும் மொத்தமாக ஊதியமற்ற விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.