வன்முறை பாதித்த இராக்கில் சிக்கியிருக்கும் 46 இந்திய நர்ஸ்கள்

பட மூலாதாரம், AP
வன்முறை மோதல்கள் உக்கிரமடைந்துவரும் இராக்கில் கிட்டத்தட்ட 200 இந்தியர்கள் சிக்கியிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஸ் தலைமையிலான ஆயுதக் குழு கைப்பற்றிய திக்ரித் என்ற நகரின் மருத்துவமனையில் பணி புரியும் 46 இந்திய நர்ஸ்களும் இதில் அடங்குவர்.
கடந்த 24 மணி நேரமாக தங்களுக்கு மிச்சமான பழைய உணவு தான் கிடைப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அந்த நர்ஸ்கள் உட்பட அங்கு சிக்கியிருக்கும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேரள மாநில முதல்வர் ஒம்மன் சாண்டி மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை வலியுறுத்தியுள்ளார்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய இராக்கில் உள்ள இந்திய தூதர், அந்த மருத்துவமனையிலிருந்து நர்ஸ்களை மீட்கும் பணியில் அரசாங்கம் ஈடுப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

























