சென்னை கட்டிட விபத்து: மீட்புப் பணியில் சிக்கல்கள்
பிரசுரிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty
சென்னையின் புறநகர்ப் பகுதியான போரூரில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வந்தாலும், அதில் சில சிக்கல்கள் இருப்பதாக உள்ளூர் செய்தியாளர் முரளி கிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஒரே வளாகத்தில் இரண்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன என்றும், அவற்றில் ஒன்று இப்போது இடிந்து விழுந்துள்ள நிலையில், அதன் இடிபாடுகளை அகற்றும்போது அடுத்த கட்டிடமும் சேதமடையும் வாய்ப்புகள் உள்ளதாக கவலைகள் எழுந்துள்ளன என்று அவர் கூறுகிறார்.
இடிந்து விழுந்த கட்டிடம் இருந்த பகுதிக்கான பாதை குறுகலாக இருப்பதும் மீட்புப் பணியில் இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.