சென்னை கட்டிட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - காணொளி

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

சென்னைப் புறநகர் பகுதி ஒன்றில், நேற்று ஏற்பட்ட கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் வேளையில், இடிபாடுகள் அகற்றப்படும்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சங்களும் ஏற்பட்டுள்ளன.

இடிபாடுகளில் 130 க்கும் அதிகமானவர்கள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

போரூருக்கு அருகிலுள்ள முகலிவாக்கம் எனும் பகுதியில் நேற்று, சனிக்கிழமை மாலை, கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

இதில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதை தமிழக தீயணைப்புத் துறையினர் உள்ளூர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீட்புப் பணியில் தமிழக தீயணைப்பு மற்றும் காவல்துறையினருடன், தேசிய பேரிடர் மீட்புப் பணியினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே அந்தக் கட்டிடத்தை கட்டிவரும் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.

இவை குறித்த காணொளி.