காணொளி: இந்தியாவின் கிழக்கு கரையோரத்தை தாக்கிய ஹுத்ஹுத் புயல்

பிரசுரிக்கப்பட்டது

ஆந்திரம், ஒரிஸ்ஸா கரையோரப் பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மின் விநியோகக் கம்பிகள் அறுந்து, கம்பங்களும் சாய்ந்துள்ளன.

வெவ்வேறு சம்பவங்களிலாய் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விரு மாநிலங்களிலுமாக மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் உறைவிடமும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நெருக்கடி நேர ஆயத்தப்பணிகளில் இந்தியாவில் கணிசமான முன்னேற்றம் தென்படுவதாக அப்பகுதியில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.