காதல் முத்தப் போராட்டம்: கொச்சியில் இளைஞர்கள் 30 பேர் கைது - காணொளி
தென்னிந்தியாவின் கொச்சி நகரில் பொதுவிடத்தில் நின்று கட்டியணைத்து முத்தமிட்டு நூதன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்காக கடற்கரையில் இளைஞர்கள் கூட, அவர்களைத் தடுக்கும் நோக்கில் சுமார் முப்பது பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
அடுத்தவரின் ஒழுக்கத்தை ஒழுங்குசெய்வதாக கூறிக்கொண்டு நடக்கும் அத்துமீறல்கள் அதிகமாகிவிட்டதால், காதல் முத்தம் என்ற இந்த போராட்டத்தை தாங்கள் நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர்.
ஆண்களும் பெண்களும் அளவுக்கதிக்கமான நெருக்கம் காட்டுவதை அனுமதிக்கிறார்கள் என கூறி கொச்சியின் காப்பிக் கடை ஒன்றை கடும்போக்கு இந்துக்கள் சிலர் அடித்து உடைத்ததன் எதிரொலியாக இந்த முத்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க மாநில உயர்நீதிமன்றம் மறுத்திருந்தாலும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆட்களைக் கைதுசெய்ததாக மாவட்ட காவல்துறைத் தலைமை அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
இந்தியப் பண்பாட்டுக்கு முரணானது என்று கூறி இந்து முஸ்லிம் என இரண்டு மதத்தினருமே இந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்திருந்தனர்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.