குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை: உயிர்ப்பலி 13 ஆனது

பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்
படக்குறிப்பு, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு நடத்திய சுகாதார முகாமில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களில் இறந்த பெண்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும் புப்பதுக்கும் அதிகமான பெண்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் ரமண் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி புதனன்று காங்கிரஸ் கட்சி சார்பிலான முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதேவேளை சத்தீஸ்கர் குடும்பக் கட்டுப்பாடு உயிரிழப்பு விவகாரத்தில் தலையிட முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 13 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுவை இந்திய உச்சநீதிமன்றம் புதனன்று தள்ளுபடி செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அம்மாநில முதலமைச்சர் ஏற்கனவே பிரதமருடன் கலந்துரையாடியதாகவும், எனவே உச்சநீதிமன்றம் அதில் தலையிட்த் தேவையில்லை என்றும் தெரிவித்து அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.