யுக்ரெய்ன் நெருக்கடி: "ரஷ்யா மீது புதிய தண்டனைத் தடைகள்"

பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவில் ஜி 20 நாடுகளின் உச்சமாநாட்டுக்காக கூடியுள்ள மேற்குலக நாடுகளின் தலைவர்கள், யுக்ரெய்னில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை ரஷ்யா மதித்து நடக்க வேண்டும், இல்லாவிட்டால் புதிய தண்டனைத் தடைகளை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

பிரிட்டிஷ் பிரதமர் கெமரன் மற்றும் ரஷ்ய அதிபர் புடின்
படக்குறிப்பு, பிரிட்டிஷ் பிரதமர் கெமரன் மற்றும் ரஷ்ய அதிபர் புடின்

யுக்ரெய்னுக்குள் ரஷ்யாவின் துருப்புகள் இனிமேலும் நிலைகொள்ளுமானால், ரஷ்யாவுடனான ஐரோப்பாவின் உறவு வேறு விதமாக மாறொவிடும் என ரஷ்ய அதிபர் புடினிடம் பிரிட்டிஷ் பிரதமர் கெமரன் தெரிவித்துள்ளார்.

யுக்ரெய்னில் ரஷ்யா ஈடுபடும் காரியங்கள் மோசமானவை என அமெரிக்க அதிபர் ஒபாமா வர்ணித்துள்ளார்.

திட்டமிட்டதற்கு முன்பாகவே இந்த மாநாட்டிலிருந்து கிளம்பிவிட புடின் முடிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா மீதான பொருளாதார தண்டனைத் தடைகள் அர்த்தமற்றவை என்றும் சட்டவிரோதமானவை என்றும் அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.