தோட்ட முதலாளியை கொலை செய்த தொழிலாளர்கள் - காணொளி

பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஒரு தோட்ட முதலாளியை கொலை செய்ததை அடுத்து அங்கு பெருந்தோட்டத்திறையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

சம்பளப்பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை நடந்துள்ளது.

இந்தியாவின் இமாலயத்தில் வளரும் தேயிலையின் டார்ஜிலிங் போன்ற வகைகள் உலக பிரசித்தி பெற்றவை. ஆனால். அங்கு உள்ளூர் சந்தைக்கான மலிவான தேயிலை சமவெளிகளிலேயே தயாராகின்றது.

அங்கு நிலைமை மிகவும் மோசமானதாகும்.

பிபிசியின் சஞ்சய் மஜும்தார் வழக்கும் காணொளி.