ஜம்மு- காஷ்மீர் பிரசாரத்தில் நரேந்திர மோடி

பிரசுரிக்கப்பட்டது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளியன்று அங்கு பிரச்சாரம் மேற்கொள்கின்றார்.

'மாநிலத்தின் முன்னேற்றமே பிரச்சனைகளுக்குத் தீர்வு': மோடி
படக்குறிப்பு, 'மாநிலத்தின் முன்னேற்றமே பிரச்சனைகளுக்குத் தீர்வு': மோடி

உதம்பூர் பகுதியில் இன்று காலை பிரச்சாரத்தை துவக்கிய நரேந்திர மோடி, தொடர்ந்து பூஞ்ச் பகுதியில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

உதம்பூர் பகுதியில் உரையாற்றிய மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் தாம் அடிக்கடி அம்மாநிலத்திற்கு விஜயம் மேற்கொள்வதாகக் கூறினார்.

வேறு எந்தவொரு இந்தியப் பிரதமரும் இந்த அளவுக்கு இப்பகுதிகளுக்கு பயணங்கள் மேற்கொண்டதில்லை என்றும் அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் அம்மாநிலத்தின் இளைஞர்களின் நல்வாழ்வுக்காகவும் தமது அரசாங்கம் அக்கறைகாட்டி வருவதாக அவர் கூறினார்.

மாநிலத்தின் முன்னேற்றம் மட்டுமே இப்பகுதிகளில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையும் என்று தெரிவித்த அவர், முதற்கட்ட தேர்தலில் அதிகளவு வாக்கு சதவீதம் பதிவானமைக்கு நன்றி கூறினார்.

நரேந்திர மோடி சென்றடைய சில மணி நேரம் முன்னதாக, அம்மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே பலத்த மோதல்கள் இடம்பெற்றிருந்தன.