தமிழக அரசின் தலைமைச் செயலர் மாற்றம்
தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவராக இருந்த கே. ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், tngovt
தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ஓய்வுபெற்றதையடுத்து, மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, மோகன் வர்கீஸ் சுங்கத் கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில், அண்ணா மேலாண்மை இன்ஸ்ட்டிடியூட்டின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் புதிய தலைவராக, கே. சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, பத்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, இத்தனை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.




























