சிங்க எண்ணிக்கை உயர்கிறது இந்தியாவில்

இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை உயர்வு
படக்குறிப்பு, இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை உயர்வு
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 27 சதவீத அளவில் உயர்ந்திருப்பதாக நாட்டில் நடத்தப்பட்ட வனவிலங்கு எண்ணிக்கை ஆய்வு ஒன்று காட்டுகிறது.

இப்போது இந்தியாவில் 523 சிங்கங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

குஜராத்தில் இருக்கும் கிர் வனப்பகுதியில் மட்டும்தான் ஆசிய சிங்கங்கள் காணப்படுகின்றன.

நூறாண்டுகளுக்கு முன்னர் சிங்கங்களின் எண்ணிக்கை ஒரு டஜன் என்ற அளவில் மட்டும்தான் இருந்தது; ஆனால் சிங்க வேட்டைக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் பிற வன உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த அளவுக்கு ஆரோக்கியமான எண்ணிக்கையைத் தந்துள்ளன.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் குஜராத் வனப்பகுதியில் இருக்கும் சிங்கங்களில் சில அவைகளின் பாதுகாப்புக்காக, அண்டை மாநிலமான மத்தியப்பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் குஜராத் அரசு அந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்திருக்கிறது.