சீனா அனுமதித்த வழியில் இந்திய யாத்ரீகர்கள் சிலர் கைலாய மலைக்கு செல்கின்றனர்

நாத்து லா என்ற ஒதுக்குப்புறமான மலைப்பாதையை யாத்ரீகர்கள் பயன்படுத்த சீனா அனுமதித்துள்ளது.
படக்குறிப்பு, நாத்து லா என்ற ஒதுக்குப்புறமான மலைப்பாதையை யாத்ரீகர்கள் பயன்படுத்த சீனா அனுமதித்துள்ளது.
பிரசுரிக்கப்பட்டது

சீனா அனுமதித்துள்ள ஒரு புதிய வழியைப் பயன்படுத்தி முதல் முறையாக இந்திய மத யாத்ரீகர்கள் திபெத்துக்குள் சென்றுள்ளனர் என்று சீன அரசு ஊடகம் கூறுகிறது.

இந்த யாத்ரீகர்கள் கைலாய மலைக்கு செல்லவிருக்கிறார்கள்.

இந்துக்களுக்கு மட்டுமின்றி பௌத்தர்களுக்கும் புனித இடமாக விளங்கும் இந்த மலையை திபெத்தியர்கள் கங்ரின்போக் என்று கூறுவர்.

நாத்து லா என்ற ஒதுக்குப்புறமான மலைப்பாதை வழியாக யாத்ரீகர்கள் திபெத்தை அடைந்துள்ளனர்.

சென்ற ஆண்டு சீன அதிபர் சீ ஜின்பிங் இந்தியா வந்தபோது, இந்த பாதையை அனுமதிப்பதென்ற உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகத் தொட்யர்புகள் அதிகரித்து வந்தாலும், இவர்களிடையிலான நெடுநாள் எல்லைத் தகராறு இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்துவதாகவே இருந்துவருகிறது.