நியூசிலாந்துக்கான இந்தியத்தூதர் திரும்ப அழைக்கப்பட்டார்

பட மூலாதாரம், high commision india
பிரசுரிக்கப்பட்டது
நியூசிலாந்துக்கான இந்திய தூதரின் மனைவி அவர்கள் வீட்டில் வேலைசெய்த பணியாளரை தாக்கியதாக புகார் எழுந்ததையடுத்து அவரை இந்திய அரசு அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக்கொண்டிருக்கிறது.
நியூசிலாந்துக்கான இந்திய தூதர் ரவி தாபர் டெல்லியில் இருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக புலனாய்வு செய்யப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ரவி தாபரின் மனைவி ஷர்மிலா தாபர் மே மாதம் தன்னை தாக்கியதாக நியூசிலாந்தின் இந்திய தூதரக பணியாளர் ஒருவர் தெரிவித்ததாகவும், ஆனல் இது தொடர்பாக முறையான புகார் செய்யவில்லை என்று தெரிவித்திருப்பதாக நியூசிலாந்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்திய தூதரோ இந்த புகாரை மறுத்திருக்கிறார்.




























