13 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் கைது

பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலத்தில் தன் 13 வயதுப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாயையும் அவரது இரண்டாவது கணவரையும் காவல்துறை கைதுசெய்துள்ளது.

கேரளாவில் 2011ஆம் ஆண்டில் இதே போல, தன் 17 வயதுப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
படக்குறிப்பு, கேரளாவில் 2011ஆம் ஆண்டில் இதே போல, தன் 17 வயதுப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

அந்தப் பெண் மீட்கப்பட்டு அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆட்களை அழைத்துவந்து, அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறு தன் பெற்றோர் வற்புறுத்தியதாக அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.

வாடிக்கையாளர்களிடம் மூவாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு அனுமதித்ததாக அந்தப் பெண்ணின் தாய் செய்தித் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

அந்த 13 வயதுப் பெண்ணிடம் உறவுகொண்ட 40 பேரில் 25 பேரை அடையாளம் கண்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு இடைத்தரகர் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பத்துப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மகளை விற்ற அந்த 37 வயதுப் பெண்ணுக்கு 7 குழந்தைகள் இருக்கின்றன. முதல் குழந்தைக்கு 24 வயதும் கடைசிக் குழந்தைக்கு 4 வயதும் ஆகிறது.

55 வயதாகும் அவரது கணவர், ஓட்டுனராக வேலைசெய்வதோடு, அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டி, வாடிக்கையாளர்களை அழைத்துவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல்லில் இந்தக் குடும்பம் வசித்துவந்தது.

2011ஆம் ஆண்டில் பணத்திற்காக 200க்கும் மேற்பட்டவர்களிடம் தன் 17 வயதுப் பெண்ணை பாலியல் உறவு கொள்ள அனுப்பிவைத்த ஒருவரை கேரள காவல்துறை கைதுசெய்தது.

இந்த வழக்கில் 29 பேர் கைதுசெய்யப்பட்டனர்.