"43% தேவேந்திர குல வேளாளர்கள் இடஒதுக்கீடு தேவையில்லை என்கிறார்கள்"

பிரசுரிக்கப்பட்டது

மதுரையில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில், ஏழு பட்டியலின ஜாதியைச் சேர்ந்த மக்களை இணைத்து தேவேந்திர குல வேளாளர்கள் என அதிகாரபூர்வமாக அழைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டுமென தேவேந்திர தன்னார்வலர் அறக்கட்டளை என்ற அமைப்பு கோரியுள்ளது.

மேலும் தங்கள் சமூகத்திற்குள் இடஒதுக்கீடு குறித்த விவாதம் தொடங்கியிருப்பதாகவும் தங்கள் இணையதளத்தில் நடத்திய விவாதத்தில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இடஒதுக்கீடு தேவையில்லை என கருதுவதாகவும் அந்த அமைப்பைச் சேர்ந்த தங்கராஜ் பிபிசியிடம் கூறினார்.