காஷ்மீரில் மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு

பட மூலாதாரம், majid jahangir
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சித் தடையை அமல்படுத்துமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அடுத்து, அங்குள்ள முஸ்லிம் பிரிவினைவாதிகள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலத்தை ஆளும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் என்ன உண்ண வேண்டும் என்ற முடிவை அவர்களே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மாடுகள் வெட்டப்படுவதற்கு எதிராக, காலனித்துவ காலத்து சட்டம் ஒன்றை பயன்படுத்தி தொடரப்பட்ட மனு ஒன்றையே நீதிமன்றம் ஆதரித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் பெருமளவிலான இந்துக்கள் பசுவை புனிதமாக கருதுகின்றனர்.
கடந்த ஆண்டில் இந்து தேசியவாத பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்ததன் பின்னர், சில மாநிலங்கள் மாடு வெட்டுவதற்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கிவருகின்றன.
ஆனால், இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பையும் மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் இந்த மாட்டிறைச்சி தடை புண்படுத்துவதாக சிறுபான்மை சமூகங்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வாதிடுகின்றனர்.




























