சண்டிகர் மக்களிடம் மன்னிப்பு கோரினார் மோடி

பட மூலாதாரம், epa
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில், வடக்கே சண்டிகர் நகருக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தால் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
புதிய விமானநிலையம் ஒன்றை திறந்துவைப்பதற்காக மோடி அங்கு வந்ததால், பள்ளிக்கூடங்களும் பொது சுடுகாடு ஒன்றும் மூடப்பட்டிருந்தன.
இந்த பிரதான சுடுகாட்டு வளாகம் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்பட்டதால் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள இன்னொரு சுடுகாட்டை மக்கள் பயன்படுத்த வேண்டியேற்பட்டது.
அந்த நகரில் வாழும் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் 'முழுமையாக தவிர்க்கமுடியாதவை' என்று தனது டுவிட்டர் குறிப்பில் தெரிவித்துள்ள மோடி, இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.




























