மும்பை ரெயில் குண்டு தாக்குதல்: ஐந்து பேருக்கு மரணதண்டனை

2006 மும்பை ரெயில் தாக்குதல்களில் 189 பேர் கொல்லப்பட்டனர் ( ஆவணப்படம்)
படக்குறிப்பு, 2006 மும்பை ரெயில் தாக்குதல்களில் 189 பேர் கொல்லப்பட்டனர் ( ஆவணப்படம்)
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் வணிகப் பெருநகரான மும்பையில் 2006ம் ஆண்டு புறநகர் ரெயில்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேருக்கு மும்பை நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கில் வேறு ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மும்பையில் பல புறநகர் ரெயில்களில் 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மாலை நேர பயண நெருக்கடி நேரத்தில் தொடர்ச்சியான பல குண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் நடத்தினர் என்று கூறப்பட்டது ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது.