என்னை நீக்க ஜவாஹிருல்லாவுக்கு அதிகாரமில்லை: தமீமுன் அன்சாரி

பிரசுரிக்கப்பட்டது

மனித நேய மக்கள் கட்சியிலிருந்து தன்னை நீக்கியது செல்லாது எனவும் தாங்கள் கூட்டவிருக்கும் பொதுக் குழுவே உண்மையான பொதுக் குழு எனவும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் தமீமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையிடம் பேசிய தமீமுன் அன்சாரி, கட்சிக்குள் தனக்கும் துணைப் பொதுச் செயலாளர் ரஷீதிற்கும் செல்வாக்கு வளர்வது பொறுக்காமலேயே தாங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறினார்.

தான் பொதுக் குழுவை கூட்ட முடிவெடுத்தபோது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் நாம் தமிழர் கட்சியின் சீமானும் கேட்டுக்கொண்டதாலேயே அந்த முடிவை தள்ளிவைத்ததாகவும் அதற்குள்ளாக ஜவாஹிருல்லா பொதுக் குழுவைக் கூட்டி தங்களை நீக்கியதாக அறிவித்ததாகவும் தமீமுன் அன்சாரி கூறினார்.

பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த பேட்டியில் ஒலி வடிவத்தை இங்கே கேட்கலாம்.