காஷ்மீரில் கைபேசி இணையத் தொடர்பு துண்டிப்பு
பிரசுரிக்கப்பட்டது
காஷ்மீரில் நான்கு இளைஞர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து பதற்றம் நிலவுவதால், கைபேசியில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், EPA
அமைதியை ஏற்படுத்தவும் வதந்தி பரவுவதைத் தடுப்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
தலைநகரான ஸ்ரீ நகரின் சில பகுதிகளிலும் மோதல் நடந்த ஹந்த்வாரா உள்ளிட்ட பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராணுவ வீரர் ஒருவர் பதின்ம வயது சிறுமியை பாலியல் ரீதியாத துன்புறுத்தினார் என்று குற்றம்சாட்டி செவ்வாய்க்கிழமையன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
ஆனால், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை ராணுவம் மறுக்கிறது.




























