ஒதிஷாவில் மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்தது; 25 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் கிழக்கே, இசைநாடகக் குழு ஒன்றை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று குடைசாய்ந்து 76 மீட்டர் ஆழத்தில் மலைப் பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 25 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் மோசமாகக் காயமடைந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை, ஒதிஷா மாநிலத்தில் தியோகர்- இலிருந்து பர்கா-வுக்கு சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்து வளைவு ஒன்றை கடக்கமுயன்றபோது குடைசாய்ந்து விழுந்துள்ளது.
பெண்கள், குழந்தைகள் அடங்கலாக 40 பேர் இந்தப் பேருந்தில் பயணித்துள்ளனர்.




























