'கோஹினூர் வைரத்தை பிரிட்டனிடமிருந்து மீளப்பெற முயற்சிக்கப்படும்'

பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டனிடமிருந்து கோஹினூர் வைரத்தை மீளப்பெறுவதற்கு தேவையான எல்லா முயற்சிகளையும் எடுக்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் இப்போது கூறுகின்றது.

முன்னாள் காலனி நாடான பிரிட்டனுக்கு அன்பளிப்பாகவே அந்த வைரம் கொடுக்கப்பட்டதாக நேற்று முன்தினம் இந்திய உச்சநீதிமன்றத்திடம் கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து இந்திய அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்லவென்றும் அந்நாட்டின் கலாசாரத்துறை அமைச்சு கூறியுள்ளது.

19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டனுக்குள் கொண்டுவரப்பட்ட கோஹினூர் வைரம், அரச குடும்பத்து ஆபரணங்களின் அங்கமாக டவர் ஆஃப் லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வைரம் பிரிட்டனால் திருடிச் செல்லப்பட்டதாகவே இந்தியர்கள் பலரும் நம்புகின்றனர்.