கருமையான வான் பாதுகாப்பு பகுதியாக மாறவுள்ள திபெத் மலைப்பகுதி
திபெத்தின் பெரும் பகுதியொன்று கருமையான வான் பாதுகாப்பு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty
நட்சத்திரங்களை எவ்வித சிறிய மாசும் இல்லாமல் வானியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் தெளிவாக காண இது அனுமதிக்கும்.
இமாலய மலைப் பகுதியில், 2,500 கிலோமீட்டர் அளவிலான பகுதியில் மின் விளக்குகள் போன்ற ஒளி தரும் பொருட்களை சீன அதிகாரிகள் கட்டுப்படுத்த உள்ளனர்.
இந்த பகுதியை நகரமயமாவதிலிருந்து பாதுகாப்பதில் விரைவாக செயல்படவில்லையென்றால், பூமியில் உள்ள ஒரு சிறந்த வானியல் தளத்தை சீனா இழக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டனர்.
அரசியல் உணர்வுபூர்வமான காலகட்டங்களில், வெளிநாட்டினர் இப்பகுதிக்கு வருகை புரிவதிலிருந்து தடை செய்யப்படுவதால், சுற்றுலா பயணிகள் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு செல்லும் போது பல இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.




























