'போலி சித்த மருத்துவர்' திருத்தணிகாசலத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவிட்- 19 நோய்க்கு மருந்து இருப்பதாகச் சொன்னதால் தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சித்தர் திருத்தணிகாச்சலம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி பிபிசி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. இன்று நடந்தவை சில முக்கிய தகவல்கள்

    • முதல் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 6 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்குத் திட்டமிடுகிறது சீனா.
    • அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா உருவாகியுள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 10,899 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,000 ஆக அதிகரித்துள்ளது.
    • கொரோனா வைரஸ் பரவலை தொடக்கம் முதலே சிறப்பாக கட்டுப்படுத்தி வரும் நாடு என பாராட்டப்பட்ட தென் கொரியாவில் புதிதாக 94 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    • தமிழகத்தில் புதிதாக 716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 510 பேர் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இதன்மூலம் தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது.
    • நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்தி மோதி பொருளாதார உதவித் தொகுப்பு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான நான்காம் கட்ட ஊரடங்கு உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
  3. ஆரம்பத்தில் எங்கள் எச்சரிக்கையை பல நாடுகள் அலட்சியப்படுத்தின: உலக சுகாதார அமைப்பு

    தற்போது சில நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ''சில நாடுகள் ஆரம்ப கட்டத்தில் தாங்கள் கொடுத்த எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் பொருட்படுத்தவில்லை'' என உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

    சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு நோய் தொற்றை சரியாக கையாளவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ''கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஜனவரி மாதம் இறுதியில் சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவித்ததாக'' உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

    பிப்ரவரி முழுவதும், கொரோனா வைரஸ் பரிசோதனை குறித்தும், அறிகுறிகள் இருப்பவர்களை தனிமைப்படுமாறும் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

    அமெரிக்கா மற்றும் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதே என கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்நாடுகள் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஒரு புதிய தொற்று தங்கள் நாட்டை ஒன்றும் செய்துவிட முடியாது என நினைத்தன என்றும் அவர் கூறினார்.

  4. 'ஆரம்ப கட்ட எச்சரிக்கைகளை உலக நாடுகள் அலட்சியப்படுத்தின'

    தற்போது சில நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ''சில நாடுகள் ஆரம்ப கட்டத்தில் தாங்கள் கொடுத்த எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் பொருட்படுத்தவில்லை'' என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.

    சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் நோய் தொற்றை சரியாக கையாளவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ''கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்திலேயே அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஜனவரி மாதம் இறுதியில் சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவித்ததாக'' உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

    பிப்ரவரி முழுவதும், கொரோனா வைரஸ் பரிசோதனை குறித்தும், அறிகுறிகள் இருப்பவர்களை தனிமைப்படுமாறும் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

    அமெரிக்கா மற்றும் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதே என கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்நாடுகள் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என உலக சுகாதார நிறுவன செய்தி தொடர்பாளர் கூறினார். மேலும் பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் ஒரு புதியதொற்று தங்கள் நாட்டை ஒன்றும் செய்துவிட முடியாது என நினைத்தனர் என்றார்.

    world health organization
  5. வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

    ஊரடங்கு காரணமாக ஆதரவின்றி தவித்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களிலிருந்து பிஹார் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

    முதற்கட்டமாக, கடந்த 10 ஆம் தேதி திருப்பூரில் வேலை செய்து வந்த 1140 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் பிஹாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இன்று மேலும், 1464 பேர் திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிஹாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவையில் பணிபுரிந்து வந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

    அவர்களை சிறப்பு ரயில்களில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இன்று மட்டுமே, மூன்று ரயில்களில் 3000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிஹார் மற்றும் ஒடிசா அனுப்பிவைக்கப்பட்டனர்.

    இன்று மதியம் 12 மணிக்கு, 1318 தொழிலாளர்களோடு கோவையிலிருந்து ஒடிசாவிற்கு சிறப்பு ரயில் கிளம்பியது. மாலை 4 மணிக்கு மற்றொரு ரயிலில் பிஹாரைச் சேர்ந்த 1464 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    முன்னதாக, இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தில் தனி மனித இடைவெளியில்லாமல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று இரவு, மேலும் 1400 தொழிலாளர்களோடு கோவையிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு மற்றொரு சிறப்பு ரயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8,700 வடமாநில தொழிலாளர்களில், 4,170 பேர் தங்களது சொந்த மாநிலம் செல்ல விருப்பம் தெரிவித்திருந்தனர்.

    இதில் தூத்துக்குடியில் உள்ள எஸ்இபிசி மின் நிறுவனத்தில் பணியாற்றும் பிகார் மாநில தொழிலாளர்கள் 263 பேர் அவர்களது சொந்த மாநிலத்திற்க்கு திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்று மாலை இவர்களை தூத்துக்குடி தெர்மல்நகரில் இருந்து பத்து அரசு பேரூந்துகளில் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் பிகார் செல்கின்றனர்.

    இவர்களை தொடர்ந்து ஜார்கண்ட் மற்றும் உத்திரபிரதேச மாநில தொழிலாள்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்க்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    migrant workers
  6. ஜெர்மனி மீண்டும் ஊரடங்கு நோக்கிச் செல்லுமா?, ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு அதிகரிக்கும் தொற்று

    ஜெர்மனியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என ஜெர்மனி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக ஜெர்மனியில்தான் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதைப் போலவே ஜெர்மனியில்தான் முதல் முறையாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வாகன வர்த்தகங்கள், உணவகங்கள் மீண்டும் இயங்க துவங்கின.

    இதுவரை இரண்டாம் கட்டமாக கொரோனா பாதிப்புகள் கடுமையாக அதிகரித்த நாடு என எந்த நாட்டையும் குறிப்பிட முடியாது. ஆனால் சில நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே போல, ஜெர்மனியிலும் எண்ணிக்கை அதிகரிக்கலாம் ஆனால் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்படும் நிலைக்கு ஜெர்மனி தள்ளப்படாது என அந்நாட்டை சேர்ந்த தொற்று நோய் மருத்துவ நிபுணர் கரே மோல்பக் செய்தியாளர்களிடம் கூறினார்.

  7. நரேந்திர மோதி இந்திய மக்களுக்கு உரை

    கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்தியப் பிரதமர் பிரதமர் மோதி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் உரையின் விவரங்களை பிபிசி தமிழின் இந்த இணைப்பின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

    தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உண்டாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இவர்களில் 510 பேர் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

    இதன்மூலம் தமிழகத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 8718 ஆக உயர்ந்துள்ளது.

  9. மலேசிய அரசு எச்சரிக்கை

    மலேசியாவில் இன்று புதிதாக 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் அன்றாடம்பதிவாகும் நோய்த்தொற்று சம்பவங்களில் இதுவே ஆகக் குறைவான எண்ணிக்கையாகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை என்றும், பலி எண்ணிக்கை 109ஆக நீடிக்கிறது என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

    மலேசியாவில் இதுவரை 6,742 பேர் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 77.5 விழுக்காட்டினர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அவர் குறிப்பிட்டார்.

    இதற்கிடையே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறுவோரிடம் இனியும் அதிகாரிகள் இனிக்க இனிக்கப் பேசமாட்டார்கள் என்றும், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி எச்சரித்துள்ளார்.

    அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  10. திருத்தணிகாசலத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

    போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை ஆறு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    கோவிட்- 19 நோய்க்கு மருந்து இருப்பதாகச் சொன்னதால் தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் திருத்தணிகாச்சலம்.

    இந்திய மருத்துவத் துறையின் இயக்குநர் காவல்துறையில் புகார் அளிக்கவே, அவரைக் கைதுசெய்தது மத்திய குற்றப் பிரிவு காவல்துறை.

    Ka Thiruthanikasalam
  11. 'சிங்கப்பூரில் 15 % பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர் '

    இன்று புதிதாக 884 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து சிங்கப்பூரில் வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 24,671ஆக அதிகரித்துள்ளது.

    இவர்களில் 3 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள். மற்ற அனைவரும் அந்நியத் தொழிலாளர்கள் என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் 19 நோயாளிகளில், 21,410 பேர் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர். சிங்கப்பூரில் இதுவரை 21 பேர் கோவிட் 19 நோய்க்குப் பலியாகி உள்ளனர்.

    கோவிட் 19 நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு காரணங்களால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகக் குணமடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 85 விழுக்காட்டினர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

    நேற்றைய நிலவரப்படி வைரஸ் பாதிக்கப்பட்ட 23,787 பேரில் மொத்தம் 3,225 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.

    து மொத்த எண்ணிக்கையில் 13.5 விழுக்காடு மட்டுமே ஆகும். அடையாளம் காணப்படும் 5 நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே அறிகுறிகள் தெளிவாகத் தெரிவதாகவும், 4 பேருக்கு லேசான நோய் பாதிப்பு மட்டுமே உள்ளது என்றும் சிங்கப்பூர் தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையம் தெரிவித்ததாக ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.

  12. அமெரிக்காவிற்கு அடுத்து ரஷ்யா

    அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா உருவாகியுள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 10,899 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,000 ஆக அதிகரித்துள்ளது.

    ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் 5000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  13. மகாராஷ்டிரத்தில் 17 ஆயிரம் சிறைக் கைதிகள் விடுதலை, மொத்தமுள்ள சுமார் 35 ஆயிரம் சிறைவாசிகளில் இது சுமார் 50 சதவீதம்

    மகாராஷ்டிரத்தின் ஆர்தர் சாலை சிறையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்த நிலையில் மாநிலத்தின் உயரதிகாரக் குழு 17 ஆயிரம் சிறைவாசிகளை தற்காலிகமாக விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலத்தின் நெரிசலான சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள 35 ஆயிரம் பேரில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் இதன் மூலம் விடுதலை ஆவார்கள்.

    ஆர்தர் சாலை சிறையில் ஏற்பட்டது போன்ற தொற்று மற்ற சிறைகளிலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், தீவிர குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இந்த நடவடிக்கையில் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்றும் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

    மகாராஷ்டிரத்தில் 17 ஆயிரம் சிறைக் கைதிகள் விடுதலை
  14. சென்னையில் தொலை மருத்துவ செயலி அறிமுகம்

    சென்னையில் டெலி மெடிசன் (தொலை மருத்துவம்) முறையில் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய செயலியை சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மக்கள் தங்கள் பலவகை உடல் நலப் பிரச்சனைகளுக்கு புதிய செயலியில் காணொலி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

    தொலை மருத்துவ செயலி அறிமுகம்.
    படக்குறிப்பு, தொலை மருத்துவ செயலி அறிமுகம்.
  15. "தமிழ்நாட்டுக்கு வந்தால் போதும் என்றே தோன்றியது"

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேசப் போக்குவரத்து தடைபட்டுள்ளதையடுத்து பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை அன்று மாலத்தீவுகளில் சிக்கியிருந்த 700க்கும் மேற்பட்ட இந்தியர்கள், இந்திய கடற்படைக் கப்பலில் கேரள மாநிலம் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

  16. 'ஊரடங்கால் மக்கள் பட்டினி' - குஜராத் உயர் நீதிமன்றம்

    கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளை தொடர்ந்து, இது குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் திங்களன்று தாமாக முன்வந்து விசாரித்தது.

    குடிமக்கள் பட்டினி கிடக்காமல் இருப்பதை உறுதிசெய்வது அரசின் தலையாய கடமை என்று நீதிபதிகள் பி.பி. பார்திவாலா, இலேஷ் வோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையின்போது தெரிவித்தது.

    மக்கள் பெரும்பாலும் பட்டினி கிடப்பதாகத் தெரிகிறது. அவர்கள் உணவும் உறைவிடமும் இன்றித் தவிக்கின்றனர். இதுதான் இந்த ஊரடங்கின் வெளிப்பாடாக இருக்கிறது என்று அப்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

  17. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: அசாமில் 14,465 பன்றிகள் இறப்பு

    அசாமில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் 10 மாவட்டங்களில் 14,465 பன்றிகள் இறந்துள்ளன.

    அசாம் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அதுல் போராவை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இந்த தகவலைத் தெரிவிக்கிறது.

    இந்த நோய்ப் பரவுவதைத் தடுக்க அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு இறந்த பன்றிகளை ஆழமாக குழி தோண்டிப் புதைக்கும்படி விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் அமைச்சர் போரா.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  18. எல்லைப் பாதுகாப்புப் படையில் ஒரு நாளில் 9 பேருக்கு தொற்று

    இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)யில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. படையின் செய்தியறிக்கையை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    இந்த 9 பேரில் 6 படையினர் டெல்லியில் உள்ளார்கள். ஒருவர் கொல்கத்தாவிலும், இருவர் திரிபுராவிலும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  19. உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?

    உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீங்கள் இங்கே அறிந்து கொள்ளலாம்.

  20. வுஹானில் 6 பேருக்கு மீண்டும் கொரோனா; 1 கோடியே 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய சீனா திட்டம்

    முதல் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 6 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்த நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்குத் திட்டமிடுகிறது சீனா.

    சீனாவின் அரசு ஊடகம் இந்த தகவலைத் தெரிவிக்கிறது.

    எனினும் இந்த யோசனை இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது.

    ஏப்ரல் 3-ம் தேதி முதல் அந்த நகரில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவே இல்லை. இந்நிலையில் 11 வார கால முடக்க நிலை ஏப்ரல் 8ம் தேதி தளர்த்தப்பட்டது.

    கடந்த வார இறுதியில் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த மக்களுக்கும் கொரோனா சோதனை செய்வது பற்றி திட்டமிடப்படுகிறது.

    1 கோடியே 10 லட்சம் மக்களைக் கொண்டுள்ள வுஹான் நகரம்.
    படக்குறிப்பு, 1 கோடியே 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட வுஹான் நகரம்.